சூலூர் அம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்
ADDED :1989 days ago
சூலூர்: ஆடி மாத கடைசி வெள்ளியை ஒட்டி, அம்மன் கோவில்களில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது.
ஆடி மாத கடைசி வெள்ளியான நேற்று முன் தினம், சின்னியம் பாளையம் மங்களாம்பிகா சமேத கணபதீஸ்வர் கோவிலில், ஊஞ்சல் உற்சவம் நடந்தது. முன்னதாக அம்மனுக்கு திரவிய அபிஷேகம் நடந்தது. காய்கறிகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன், பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, ஊஞ்சலில் அலங்கரிக்கப்பட்ட உற்சவர் வைக்கப்பட்டடு, பக்தி பாடல்கள் பாடப்பட்டன. இதேபோல், மைலம்பட்டி மாகாளியம்மன் கோவிலில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.