தர்மபுரி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED :1881 days ago
தர்மபுரி: ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, தர்மபுரியில் உள்ள ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு, நேற்று காலை, 5:30 மணிக்கு, முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால், சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து, வீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் யாரும் இதில் கலந்து கொள்ளவில்லை. இதேபோல், தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவில், தர்மபுரி ஹரிஹரநாதர் தெரு ஆஞ்சநேயர் கோவில், பாலக்கோட்டில் உள்ள, வீரதீர ஆஞ்சநேயர் கோவில் உட்பட, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள, ஆஞ்சநேயர் கோவில்களில், ஆவணி மாத அமாவாசையை முன்னிட்டு நேற்று, அபிஷேக அலங்காரம் நடந்தன.