விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு காப்பு கட்டிய பக்தர்கள்
ADDED :1881 days ago
பல்லடம்: விநாயகர் சதுர்த்தி விழா, ஆக., 22ல் கொண்டாடப்பட உள்ளது. இதை முன்னிட்டு, திருப்பூர் தெற்கு ஒன்றிய இந்து முன்னணி சார்பில், காப்பு கட்டுதல் நிகழ்ச்சி, பல்லடம் திருப்பூர் ரோடு, அருள்புரம் அருகே உள்ள விநாயகர் கோவிலில் நடந்தது. தெற்கு ஒன்றிய மாவட்ட செயற்குழு உறுப்பினர் அருணாச்சல மூர்த்தி தலைமை வகித்தார். ஒன்றிய துணைத் தலைவர்கள் கார்த்தி, மற்றும் ராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில், விநாயகர் சிலை பிரதிஷ்டை விழாவில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்கு, பூசாரிகளும்; குழுவினர்களுக்கு, நிர்வாகிகளும் காப்புகளை அணிவித்தனர். மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.