உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வேளாங்கண்ணியில் 29ல் பெருவிழா துவக்கம்

வேளாங்கண்ணியில் 29ல் பெருவிழா துவக்கம்

நாகப்பட்டினம்: வேளாங்கண்ணியில் வரும், 29ம் தேதி துவங்கவுள்ள ஆரோக்கியமாதா தேவாலய ஆண்டுத் திருவிழாவில் பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று கலெக்டர் பிரவின் நாயர் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: நாகை மாவட்டம் வேளாங்கண்ணி ஆரோக்கிய அன்னை ஆண்டு பெருவிழா வரும், 29ம் தேதி துவங்க உள்ளது. கொரோனா தொற்று காரணமாக பக்தர்கள் வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு வர தடை செய்யப்படுகிறது. பெருவிழா நிகழ்ச்சிகளை காண ஆலய ஆராதனையை தொலைக்காட்சி மற்றும் இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது. பக்தர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !