உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமேஸ்வரத்தில் 40 விநாயகர் சிலை தயார்

ராமேஸ்வரத்தில் 40 விநாயகர் சிலை தயார்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் ஹிந்து முன்னணியினர் அரசு விதிமுறைப்படி 40 இடத்தில் விநாயகர் சிலை வைக்க ஆயத்தமாகி வருகின்றனர். ஆக.,22ல் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி பொது இடத்தில் விநாயகர் சிலைகள் வைத்து பூஜை செய்யவோ, ஊர்வலம் செல்ல கூடாது என தமிழக அரசு தடை விதித்தது. இந்நிலையில் ராமேஸ்வரம், பாம்பன், தங்கச்சிமடத்தில் 40 இடத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாத 2 முதல் 3 அடி உயரமுள்ள விநாயகர் சிலைகள், ராமேஸ்வரம் ஹிந்துமுன்னணி அலுவலகத் திற்கு வந்துள்ளது. இச்சிலைகள் அரசு விதிமுறைக்குட்பட்டு பக்தர்கள் இல்லத்தில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது என இந்து முன்னணி மாவட்ட பொதுச்செயலர் ராம மூர்த்தி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !