சத்ய சாய் கோவில் 23ம் தேதி திறப்பு!
ஊட்டி: ஊட்டி எல்லநள்ளி பகுதியில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ சத்ய சாய் கோவில் வரும் 23ம் தேதி திறக்கப்படுகிறது. ஊட்டி அருகேயுள்ள எல்லநள்ளியில் தமிழ்நாடு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பு சார்பில், ஸ்ரீ சத்ய சாய் கோவில் கட்டப்பட்டுள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து இக்கோவில் வரும் 23ம் தேதி திறக்கப்படுகிறது. அன்றைய தினம் காலை 10 மணிக்கு ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் அகில இந்திய தலைவர் சீனிவாசன் கோவிலை திறந்து வைக்கிறார். விழாவில் ஸ்ரீ சத்ய சாய் சேவா அமைப்பின் மாநில தலைவர், மாவட்ட தலைவர், மாநில இளைஞர் ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் பங்கேற்கின்றனர். மாலை 4 மணி முதல் 6 மணி வரை இசை நிகழ்ச்சிகள், ஊட்டி பாலவிகாஸ் மாணவர்களின் பாரம்பரிய நடனம், நீலகிரி சாய் இளைஞர்கள் சார்பில், சத்ய ஹரிச்சந்திரா நாடகம் நடக்கிறது. இறுதியாக, மகா மங்கள ஆரத்தி நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை நீலகிரிமாவட்ட ஸ்ரீ சத்ய சாய் சேவை அமைப்பின் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.