உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானசரோவர், முக்திநாத் யாத்ரிகர்களுக்கு நிதியுதவி: தெய்வீக பேரவை நன்றி!

மானசரோவர், முக்திநாத் யாத்ரிகர்களுக்கு நிதியுதவி: தெய்வீக பேரவை நன்றி!

சென்னை : மானசரோவர், முக்திநாத் செல்லும் யாத்ரிகர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என, அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு, தமிழக தெய்வீகப் பேரவை நன்றி தெரிவித்துள்ளது. தமிழக தெய்வீகப் பேரவை மாநில தலைவர் மனோகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மானசரோவர், முக்திநாத் செல்லும் யாத்ரிகர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என, பல ஆண்டுகளாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், சட்டமன்ற கூட்டத்தொடரில், மானசரோவர், முக்திநாத் செல்லும் யாத்ரிகர்களுக்கு நிதி உதவி வழங்கப்படும் என, தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்புக்கு தமிழக தெய்வீக பேரவையின் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும், ஜுன் 3ம் தேதி, சென்னை திருவல்லிக்கேணியில், முதல்வருக்கு நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மடாதிபதிகள், ஆதினங்கள் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இவ்வாறு மனோகர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !