விநாயகருக்கு பூஜை செய்த வளர்ப்பு யானைகள்
ADDED :1872 days ago
கூடலுார்: முதுமலையில் நடந்த விநாயகர் சதுர்த்தி விழாவில், விநாயகருக்கு வளர்ப்பு யானைகள் பூஜை செய்தது.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைகள் முகாமில், இன்று காலை விநாயகர் சதுர்த்தி தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. முதலில், பழங்குடி மக்கள் தங்கள் பாரம்பரிய முறையில் பூஜை செய்தனர். தொடர்ந்து, வளர்ப்பு யானை மசினி, கிருஷ்ணா ஆகிய யானைகள் மணி அடித்து, வலம்வந்து பூஜை செய்ததுடன், கோவிலை சுற்றி வந்து விநாயகரை வணங்கியது. பூஜையை தொடர்ந்து, வளர்ப்பு யானைகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் உணவுடன் பழங்கள், போங்கல் உள்ளிட்ட சிறப்பு உணவுகள் வழங்கப்பட்டன. யானைகள் நடத்திய விநாயகர் பூஜை அனைரையும் கவர்ந்தது.