விநாயகர் சதுர்த்தி: பூஜை செய்த தமிழக முதல்வர்
ADDED :1871 days ago
சேலம்: தமிழக முதல்வர் இபிஎஸ், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சேலத்தில் உள்ள தமது இல்லத்தில் விநாயகருக்கு பூஜை செய்து, வழிபாடு நடத்தினார்.
சேலம் சூரமங்கலம் பகுதியில் உள்ள முதல்வர் இல்லத்தில் இன்று காலை விநாயகர் சதுர்த்தி பூஜை நடைபெற்றது. களி மண்ணால் செய்த விநாயகர் சிலையை வைத்து, இபிஎஸ் பூஜைகள் செய்தார். விநாயகருக்கு தீபாராதனை காட்டி, தோப்புக்கரணம் போட்டு, குடும்பத்தினருடன் வழிபாடு நடத்தினார். பூஜையில் அவரது குடும்பத்தினரும், முக கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் நின்று சாமி கும்பிட்டனர்.