பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில் தீர்த்தவாரி உற்சவம்
ADDED :1929 days ago
திருப்பத்தூர் : சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி விநாயகர் கோயிலில் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில் தெப்பக்குளத்தில் தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது.
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோயிலில், சதுர்த்தியை முன்னிட்டு தீர்த்தவாரி உற்சவம் , கொழுக்கட்டை படையல் நிகழ்ச்சி நடந்தது. இங்கு சதுர்த்தி விழாவில் தினமும் சுவாமி பல்வேறு அலங்காரங்களில் புறப்பாடு நடந்தது. பத்தாம் நாள் விழாவான இன்று உற்சவர், சண்டிகேஸ்வரர் கோயிலை வலம் வந்து, ஊரணியில் எழுந்தருளினர். கோயில் தெப்பக்குளத்தில் குளத்தில், கூர்ஜம், அங்குச தேவருக்கு, தீர்த்த வாரி நிகழ்ச்சி நடைபெற்றது. பின் சுவாமிக்கு மகா அபிஷேகம் நடந்தது. தங்க மூஷிக வாகனத்தில் உற்சவர் விநாயகர் அருள்பாலித்தார். கொரோனா ஊரடங்கால் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.