வீடுகள் தோறும் விநாயகர் ஸ்டிக்கர்
ADDED :1929 days ago
சிவகாசி: கொரோனாவை ஒழிப்போம் விநாயகரை வழிபடுவோம் என்ற வாசகத்துடன் கூடிய ஸ்டிக்கரை பா.ஜ., ஹிந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் வீடுகள், கோயில்களில் நிர்வாகிகள் ஒட்டினர். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கேது அம்ச மாக கொண்ட விநாயகர் பெருமானை வீட்டு வாசலில் வைத்து விளக்கேற்றி வழிபடுவோம். கொரோனாவை இந்தியாவிலிருந்து விரட்டுவோம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பா.ஜ., மாவட்ட பொது செயலாளர் செல்வம், நகர தலைவர் குருநாதன், நகர பொது செயலாளர்கள் காசி விஸ்வநாதன் சரவணன், துணைத் தலைவர் பரமசிவம் , மாவட்ட பொறுப்பாளர் ரமேஷ், ஊடக பிரிவு ஆறுமுகச்சாமி பங்கேற்றனர்.