கோவை கெளமார மடத்தில் ஆன்மீக நூல் வெளியீடு
ADDED :1870 days ago
மயிலாடுதுறை: மயிலாடுதுறை ஆன்மிகப் பேரவை சார்பில் 42வது நூலாக கடம்பா போற்றி கந்தா போற்றி - கந்தர் சஷ்டி கவசம் நூல் வெளியீட்டு விழா கோயமுத்தூர் சின்ன வேடம்பட்டி கௌமார மடாலயத்தில் நடைபெற்றது. சிரவை ஆதீனம் மடாதிபதி டாக்டர். தவத்திரு. குமரகுருபர சுவாமிகள் அவர்கள் நூலை வெளியிட, முதல் பிரதியை மயிலாடுதுறை ஆன்மீக பேரவையின் நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் ராம. சேயோன் பெற்றுக்கொண்டார். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக பயிற்றுனர் தேவசேனன், கோவை சித்தகுருஜி மற்றும் கெளமார மடத்தின் மெய்யன்பர்கள் கலந்து கொண்டார்கள்.