அவ்வையார் அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு சிறப்பு வழிபாடு
ADDED :1969 days ago
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், கீழையூர் வீரட்டானேஸ்வரர் கோவில் பெரியானைக் கணபதிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
திருக்கோவிலூர், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில் அவ்வையார் அகவல் பாடிய பெரியானை கணபதிக்கு காலை 10:30 மணிக்கு யாகசாலை பூஜை, மகா அபிஷேகம், வெள்ளி கவச அலங்காரம், சோடசோபவூபச்சார தீபாராதனை நடந்தது. மாலை பெரியானைக் கணபதி சந்தனகாப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். உற்சவமூர்த்தி விநாயகர் மூஷிக வாகனத்தில் உள்பிரகாரத்தில் உலா வந்தார். பக்தர்கள் யாரும் இன்றி தனிமனித இடைவெளியுடன் சிவாச்சாரியார்கள் மட்டுமே விழாவில் கலந்து கொண்டனர்.