உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிம்மம்: வெற்றி நிச்சயம்

சிம்மம்: வெற்றி நிச்சயம்

ராசிக்கு 11ல் இருந்த ராகு செப்1 முதல் ஜீவன ஸ்தானமான 10ம் வீட்டில் சஞ்சரிக்க உள்ளார். இதனால் பணிச்சுமை அதிகரிக்கும் என்றாலும் வருமானம் கிடைக்கும். போட்டியாளர் மத்தியில் திறம்பட செயல்பட்டு வெற்றி காண்பீர்கள். நான்காம் இடத்திற்கு வரும் கேது நல்ல ஞானத்தை வழங்குவார். எதிர்பாராத  பிரச்னைகளை சமாளிக்கும் கலையை கேது கற்றுத் தருவார்.  தீயவர்களின் சேர்க்கை ஏற்பட வாய்ப்புண்டு. சில நேரங்களில் இது பாதுகாப்பு தந்தாலும் பிற்காலத்தில் பிரச்னையாக உருவெடுக்கும். மொத்தத்தில் ராகு, கேது புதிய வளர்ச்சி அளித்து வெற்றியை கொடுப்பர். குடும்பம்: நெருங்கிய உறவினருக்கு கூட உதவ முடியாமல் போகலாம். சுற்றத்தார் மத்தியில் அவப்பெயர் வரலாம். அடுத்தவர் கேலிக்கு ஆளாவீர்கள். தேவையற்ற நட்பால் குடும்பத்தில் குழப்பம் நேரலாம்.  தாய்வழி உறவினரால் விரும்பத்தகாத மாற்றத்தை சந்திப்பீர்கள். வாழ்க்கைத்துணையின் ஆலோசனையை ஏற்பது நன்மையளிக்கும்.  தொழில்: தொழில், வியாபாரத்தில்  நேரத்திற்குத் தக்கபடி உத்தியை மாற்றி வெற்றி காண்பீர்கள்.10ம் இடத்திற்கு வரும் ராகுவால் தொழிலில் வளர்ச்சி காண்பீர்கள். தனகாரகர் சுக்ரனின் ராசியில் ராகு அமர்வதால் தொழிலில் வருமானம் உயரும்.  தொழில்முறை வித்தைகளில் மேம்படுவீர்கள். புத்தி உத்திகளைக் கையாண்டு லாபம் காண்பீர்கள். இக்கட்டான சூழலிலும் விவேகமாக செயல்பட்டு பெருமை காண்பீர்கள். பணியாளர்கள் சம்பந்தமில்லாத பணிகளில் ஈடுபடுத்தப்படுவர். அதிகாரிகளிடம் நற்பெயர் காண்பர். பதவிஉயர்விற்கான வாய்ப்பு கிடைக்கும். நிதி நிலை : வாழ்க்கைத் தரம் உயரும். மனைவியின் பெயரில் அசையாச் சொத்து முதலீடு செய்வது நல்லது. குருபெயர்ச்சிக்கு பின் நிதிநிலை உயரும். குருவின் பார்வை ராகுவின் மீது படுவதால் பொருளாதார வளர்ச்சி உண்டாகும். பெண்கள்: வயிற்றுவலி, ரத்தப்போக்கு பிரச்னை ஏற்படலாம். மாற்றுமொழியினரால் வீண் பிரச்னை ஏற்படலாம். வாழ்க்கைத் துணைவரோடு இணைந்து புதிய முயற்சியில் ஈடுபடுவீர்கள். கணவர்வழி உறவினருக்கு உதவ முன்வருவீர்கள். குடும்பத்தினை பொறுப்புடன் நடத்திச் செல்வீர்கள்.மாணவர்கள்: மாணவர்கள் தேக்கநிலைக்கு ஆளாவர். தேர்வினில் சற்று சுணக்கம் ஏற்படலாம். பாடுபட்டு உழைத்தால் மட்டுமே நல்ல மதிப்பெண் பெற முடியும்.  கம்ப்யூட்டர் சயின்ஸ். உயிரியல், வேதியியல், பிசினஸ் துறை மாணவர்கள் முன்னேற்றம் காண்பர். உடல்நலம்: உடல்நிலையில் கவனம் செலுத்துவது அவசியம். தைராய்டு, இதய பிரச்னை ஏற்படலாம். சத்துள்ள உணவுகளை உண்பது நல்லது. உடல்நலக்குறைவை அலட்சியப்படுத்தாமல் உடனுக்குடன் கவனிப்பது நல்லது. பரிகாரம்:* ஞாயிறன்று மாலை சரபேஸ்வரை வழிபடுதல்* தினமும் நீராடியதும் சரபர் அஷ்டகம் படித்தல் * தமிழ் மாதப்பிறப்பன்று அன்னதானம் செய்தல்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !