சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!
ADDED :4903 days ago
திருச்சி: சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து கோயிலுக்குள் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை நடத்தினர். புகழ்பெற்ற இக்கோயிலில் சோதனை நடந்ததால் 3 மணி நேரம் நடை சாத்தப்பட்டது. இதனால் பக்தர்கள் கடும் சிரமப்பட்டனர். மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூமிற்கு வந்த தொலைபேசி அழைப்பில் ஒரு பெண் பேசினார். இதில் மாரியம்மன் கோயிலில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் வெடித்து சிதறும் என்றார். இதனையடுத்து எஸ்.பி.,அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வெடிகுண்டு நிபுணர்கள் மோப்பநாயுடன் வந்து குண்டுகள் எதுவும் இருக்கிறதா என சோதனை நடத்தினர். ஆனால் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை என கண்டறியப்பட்டது. இந்த சம்பவத்தினால் கோயிலுக்கு வந்த பக்தர்கள் பெரும் பதட்டமடைந்தனர்.