திருப்பரங்குன்றம், விநாயகர் சதுர்த்தி விழா
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் மூலஸ்தானத்தில் எழுந்தருளியுள்ள மூலவர் கற்பக விநாயகர் சன்னதியில் உற்ஸவர் விநாயகர் விக்ரகம் மற்றும் கிராமத்தினர் சார்பில் வழங்கப்பட்ட களிமண் பிள்ளையார்சிலை வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.கோயில் மண்டபங்களில் எழுந்தருளியுள்ள விநாயகர்களுக்கு கொழுக்கட்டை படைக்கப்பட்டு தீபாராதனை நடந்தது.திருநகர் சித்தி விநாயகர் கோயிலில் யாகசாலை பூஜை மூலவர், உற்ஸவருக்கு புனித நீர் அபிஷேகம் நடந்தது. மகா கணபதி ஹோமத்தையடுத்து மாலை பல்லக்கில் சுவாமி கோயிலுக்குள் வலம் வந்தார்.பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் கணபதி ஹோமம், அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. மூலவருக்கு வெள்ளி கவசம் சாத்துப்படியானது.ஹார்விபட்டி பாலமுருகன் கோயிலில் எழுந்தருளியுள்ள விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தன. திருநகர் மகாலட்சுமி காலனி வரசித்தி விநாயகர் கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.