பெ.நா.பாளையத்தில் 63 விநாயகர் சிலைகள் கரைப்பு
ADDED :1870 days ago
பெ.நா.பாளையம்:கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில், பெரியநாயக்கன்பாளையம், துடியலுார், சின்னதடாகம் உள்ளிட்ட, 60 இடங்களில் விநாயகர் சிலைகள், அதிகாலை பிரதிஷ்டை செய்யப்பட்டு, வழிபாடு நடந்தது.மதியத்துக்கு பிறகு சிலைகள், இடிகரையில் உள்ள தனியார் தோட்டத்தில் உருவாக்கப்பட்ட சிறிய குளத்தில் கரைக்கப்பட்டன. விஸ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில், மூன்று இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகளும் கரைக்கப்பட்டன.