உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுயம்பு குருபகவான் கோயிலில் லட்சார்ச்சனை கோலாகலம்!

சுயம்பு குருபகவான் கோயிலில் லட்சார்ச்சனை கோலாகலம்!

குருவித்துறை: சோழவந்தான் அருகே குருவித்துறை சுயம்பு குருபகவான் கோயிலில் நடந்த லட்சார்ச்சனையில் ஏராளமான பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர். குருவித்துறை சித்திர ரத வல்லப பெருமாள் கோயில் முன் சுயம்பு குருபகவானுக்கு தனிக்கோயில் உள்ளது. குருபகவான் நேற்று மாலை 6.27 மணிக்கு மேஷத்தில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகிறார். இதை முன்னிட்டு அனைத்து ராசிக்கரர்களுக்கு கோயிலில் பரிகாரபூஜை மற்றும் லட்சார்ச்சனை நடந்தது. ரங்கநாதபட்டர், ஸ்ரீதர், சடகோபன் பட்டர்கள் லட்சார்ச்சனை செய்தனர். பல மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் பரிகார பூஜை செய்தனர். மாவட்ட கவுன்சிலர்கள் செல்லப்பாண்டி, அய்யப்பன், ஊராட்சி தலைவர் கர்ணன், துணைதலைவர் பன்னீர் பங்கேற்றனர். அறநிலையத்துறை உதவி ஆணையர் ராஜமாணிக்கம், தக்கார் செல்வி, நிர்வாகஅதிகாரி சக்கரையம்மாள், ஊழியர் வெங்கடேசன் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !