கெங்கவல்லி, பகடப்பாடியில் கோவில் நிலங்கள் மீட்பு
ADDED :1872 days ago
கெங்கவல்லி: கெங்கவல்லி, பகடப்பாடியில், எல்லையம்மன், கைலாசநாதர், வேதநாராயணபெருமாள் கோவில் உள்ளது. அக்கோவிலுக்கு, 30 ஏக்கருக்கு மேல் நிலம், இடங்கள் உள்ளன. அந்த இடத்தில், ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வந்ததால், அப்பகுதியினர் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இதனால், கோவில் நிலங்களை, ஹிந்து சமய அறநிலையத்துறை கையகப்படுத்தியது. ஆத்தூர் வெள்ளை விநாயகர் கோவில் செயல் அலுவலர் சோழமாதேவியை, பகடப்பாடியில் கையப்படுத்திய கோவில், நிலங்களுக்கு தக்காராகவும், சிறப்பு பணியாளர்களாக, செயல் அலுவலர்களான, வடசென்னிமலை சுரேஷ்குமார், ஆறகளூர் கவிதா, சேலம், சின்னக்கடைவீதி, குணசேகரன் ஆகியோரை நியமித்து, சேலம் மாவட்ட உதவி ஆணையர் உமாதேவி உத்தரவிட்டார். இவர்கள், நேற்று, மக்கள், போலீசார், வருவாய்த்துறை முன்னிலையில், கோவில் நிலங்களை மீட்டனர்.