உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராகு பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம் இராகு ஸ்தலத்தில் நேரடி ஒளிபரப்பு

ராகு பெயர்ச்சி விழா: திருநாகேஸ்வரம் இராகு ஸ்தலத்தில் நேரடி ஒளிபரப்பு

கும்பகோணம்: கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் தமிழக நவக்கிரக தலங்களில் ஒன்றான ராகுதலம் கிரிகுஜாம்பிகை உடனாகிய நாகநாத ஸ்வாமி கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதி கொண்டு ராகுபகவான் நாககன்னி, நாகவள்ளி என இருதேவியருடன் மங்கள ராகுவாக அருள்பாலிக்கிறார்.

ராகுகாலத்தில் ராகுபகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வழிபடுவது சிறப்பு. சிறப்புமிக்க இத்தலத்தில் ராகுபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு ராகு பெயர்ச்சி விழா வரும் 1ம் தேதி (செப்.1) நடைபெறுகிறது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் பக்தர்களுக்கு கோயிலில் அனுமதி இல்லாததால், நடைபெற உள்ள சிறப்பு அபிஷேகத்தை பக்தர்கள் கண்டுகளிக்க ஆன்லைன் மூலம் நேரலையாக ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. பக்தர்கள்  https://www.youtube.com/channel/UCzuDqbx-8DVwSATVoWCFOHw?view_as=subscriber என்ற YouTube channel மூலம், 01.09.2020   காலை 10.30 மணிக்கு நேரலை ஒளிபரப்பு மூலம், பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !