உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தாயிற் சிறந்த கோவிலுமில்லை

தாயிற் சிறந்த கோவிலுமில்லை

போற்றுகிறார் திரு.வி.க.,

* தாயே கண் கண்ட தெய்வம். அவரை விடச் சிறந்த கோயில் வேறில்லை.  

* வாழ்க்கை என்னும் மரத்திற்கு இளமையில் கற்கும் கல்வி வேர் போன்றது.
* ஒழுக்கம் உடையவன் முகத்தில் அழகு தெய்வம் குடியிருக்கும்.
* கடவுள் நம்பிக்கை இல்லாதவன் விலங்கு நிலைக்கு தள்ளப்படுவான்.
* யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டக் கூடாது.   
* எல்லா உயிர்களும் கடவுளின் பிள்ளைகளே.
* கற்பே ஆபரணம். அதைக் காப்பது பெண்களின் கடமை.
* பணத்திற்காக பிறரைத் துன்புறுத்தி வேலை வாங்குவது கூடாது.
* கடவுள் அளித்த அரிய கொடை உடல். அதை நல்வழியில் பயன்படுத்துங்கள்.
* மற்றவர்களுடன் கொடுத்து வாழ்வதே உண்மையான மகிழ்ச்சி.
* நம்மிடம் உள்ள தெய்வீக சக்தியை உணர்வதே வாழ்வின் பயன்.
* மனிதனுக்கு செய்யும் சேவை கடவுளுக்குச் செய்யும் சேவை.
* நோயில்லாத மக்கள் வாழும் நாடே சிறந்த நாடு.
* அறிவுரை சொல்பவன் முதலில் தன் குறைகளை முதலில் போக்க வேண்டும்.
* ஒழுக்கமுடன் வாழ்பவன் கடவுளின் கட்டளைப்படி வாழ்கிறான்.
* அன்பு, தியாக குணத்தால் ஆன்மிக சிந்தனை மேலோங்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !