உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடையம் பகுதி கோயில்களில் குருபெயர்ச்சி விழா

கடையம் பகுதி கோயில்களில் குருபெயர்ச்சி விழா

ஆழ்வார்குறிச்சி : கடையம் வட்டார கோயில்களில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. குருபகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு நேற்று மாலை 5.18 மணிக்கு பெயர்ச்சி ஆனார். இதையடுத்து கடையம் கைலாசநாதர்- பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் குருபெயர்ச்சி விழா கோலாகலமாக நடந்தது. குருபெயர்ச்சி விழாவை முன்னிட்டு சிறப்பு யாகம், கும்ப ஜெபம், விசேஷ அபிஷேகம் ஆகிய வைபவங்களை சுந்தர்பட்டர் நடத்தினார். பின்னர் குருபகவான் விசேஷ கோலத்தில் காட்சியளித்தார். குருபெயர்ச்சி விழாவில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர்.

* கடையம் வில்வவனநாதர்-நித்யகல்யாணி அம்பாள் கோயிலில் நடந்த குருபெயர்ச்சி விழாவில் சிறப்பு ஹோமம், விசேஷ யாகம், அபிஷேகம், ஆராதனை, சிறப்பு அலங்காரத்தில் குருபகவான் காட்சியளித்தல், புஷ்பாஞ்சலி ஆகிய வைபவங்களை குமார்பட்டர் நடத்தினார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !