திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் குருபெயர்ச்சி விழா
திருச்செந்தூர் : திருச்செந்தூர் முருகன் கோயிலில் குருபெயர்ச்சி விழா நடந்தது. திருச்செந்தூர் குருபகவான் ஸ்தலம். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான இங்கு பிரதஸ்பதியாகிய குருவால் பூஜிக்கப்பட்ட இடமாகும். நவக்கிரகங்களில் சுப கிரகமான குருபகவான் மேஷராசியில் இருந்து ரிஷபராசிக்கு (நேற்று) மதியம் பெயர்ச்சியானார். குருபெயர்ச்சியை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயில் நேற்று அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 5மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் அதனைத் தொடர்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்து. குருபெயர்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு குருபகவானுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து பிரார்த்தனை செய்தனர். பக்தர்கள் வசதிக்காக தஷ்ணாமூர்த்தி சன்னதியில் வரிசைமுறை செய்யப்பட்டிருந்தது. இதேபோல் கோயில் இடும்பன்கோயில் கந்தசஷ்டி மண்டபத்தில் குருபகவானுக்கு சிறப்ப அபிஷேகம் மற்றும் 9வகை ஹோம பூஜைகளும் நடந்தது. இந்நிகழ்ச்சியில் கோயில் தக்கார் கோட்டை மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ.,சேகர், அய்யாசாமி, வக்கீல் சந்திரசேகரன், செந்தில்முருகன், பள்ளி நிர்வாகி சுப்பிரமணியன், தக்கார் உதவியாளர் நாகராஜன், காணியாளன் புதூர் பெருமாள், ராமகிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.