ஓடி வந்த கரடிவேந்தன்
ADDED :2027 days ago
‘ஜாம்பவான்’ என்னும் கரடி வேந்தனை கேள்விப்பட்டிருப்பீ்ர்கள். இவர் வாமனராக வந்த மகாவிஷ்ணு மூன்றடியால் உலகளந்த காட்சியைக் கண்டதும் ஓடி வந்தார். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக பறை ஒன்றை கொட்டியபடி வலம் வந்து வணங்கினார். ஆண்டாள் திருப்பாவையில் வாமனரைப் பாராட்டி மூன்று பாசுரங்கள் பாடியிருக்கிறாள். மற்ற அவதாரங்களில் மகாவிஷ்ணு அசுரர்களை கொல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். ஆனால் மகாபலி அசுரனாக இருந்தாலும் அவனைக் கொல்லவில்லை. சிரஞ்சீவியாக வாழும் பாக்கியம் அளித்தார். இதனால் ‘ஓங்கி உலகளந்த உத்தமன்’ என பாராட்டுகிறாள் ஆண்டாள்.