உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கைலாசநாதர் கோவிலில் பிரதோஷம்

கைலாசநாதர் கோவிலில் பிரதோஷம்

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. உளுந்தூர்பேட்டை ஸ்ரீ காமாட்சி அம்மன் சமேத கைலாசநாதர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. இதனையொட்டி நேற்று மாலை 4:00 மணிக்கு சுவாமிக்கு பால், தயிர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. பின் சுவாமிக்கு தீபாராதனை வழிபாடு நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். பின்னர் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி கோவில் வளாகத்தில் புறப்பாடு நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !