சித்தர் குழந்தைவேல் சுவாமிகள் கோவில் கும்பாபிஷேகம்
உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டை அருகே ஜீவசமாதி அடைந்த கோவில் பூசாரிக்கு கோவில் கட்டி கும்பாபிஷேகம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் பூசாரியாக பல ஆண்டுகள் சேவையாற்றிய குழந்தைவேல் சுவாமி கடந்த 1938 ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். அவரது நினைவாக கிராம மக்கள் ஓம் ஸ்ரீ சித்தர் குழந்தைவேல் சுவாமிகள் கோவில் கட்டினர். இக்கோவில் கும்பாபிஷேகம் காலை 7 மணியளவில் நடந்தது. அதனையொட்டி நேற்று மாலை சிறப்பு பூஜைகள் நடந்தது. இன்று காலை 6 மணியளவில் யாகசாலை பூஜைகள், வேள்வி பூஜைகள் நடந்தது. இப்பவும் பின்னர் காலை 7 மணியளவில் கலச பூஜை வலம் வந்து கோவில் கோபுரத்தில் உள்ள லிங்கத்திற்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.