உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் தரிசனம்

திருப்பரங்குன்றம், கொரோனா ஊரடங்கு தளர்வுகளையடுத்து திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முககவசம், சமூக இடைவெளியை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். சமூக இடைவெளியை பின்பற்ற பக்தர்கள் நிற்க வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. மேலுார் சிவன் கோயில் 160 நாட்களுக்கு பிறகு திறக்கப்பட்டு, பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களுக்கு உடல் வெப்ப பரிசோதனை செய்யப்பட்டு, சானிட்டைசர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது. ஒரே நேரத்தில் ஐந்து பக்தர்கள் வீதம் அனுமதிக்கப்பட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி பாலசரவணன், சிவாச்சார்யார் தட்சினாமூர்த்தி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !