திருப்பரங்குன்றம் சிவபெருமானுக்கு பவுர்ணமி பூஜை
ADDED :2222 days ago
திருப்பரங்குன்றம், திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறமுள்ள பால்சுனை கண்ட சிவபெருமானுக்கு பவுர்ணமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், பூஜை நடந்தது. திருநகர் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயிலில் புவனேஸ்வரி அம்மனுக்கு லலிதா சகஸ்ரநாம ஹோமம் முடிந்து மூலவர், உற்ஸவருக்கு மகா அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. ராகு, கேதுவிற்கு சிறப்பு அபிஷேகம் பூஜை நடந்தது.