உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 500 கழுவேற்ற நடுகல் கண்டெடுப்பு

500 கழுவேற்ற நடுகல் கண்டெடுப்பு

திருப்பத்துார் : திருப்பத்துார் அருகே, கழுவேற்ற நடுகல், உடன் கட்டை நடுகல் கண்டெடுக்கப்பட்டது.

திருப்பத்துார் துாயநெஞ்சக் கல்லுாரி தமிழ்த்துறை பேராசிரியர் மோகன்காந்தி கூறியதாவது: திருப்பத்துார் அருகே, மடவாளம் அடுத்த செலந்தம்பள்ளியில், வில்வநாதன், 55, என்பவர் நிலத்தில் கிடைத்த இரண்டு கல்லை, அப்பகுதி மக்கள் வழிபட்டு வந்தனர். அவை, 500 ஆண்டுகள் பழமையான, கி.பி.16ம் நுாற்றாண்டை சேர்ந்தவை. வீரன் உள்ள நடுகல், 2.5 அடி உயரம், 1.5 அடி அகலம், உடன் கட்டை நடுகல், ௨ அடி உயரம், ௧ அடி அகலத்தில் உள்ளது. மரக்கட்டையின் மேலே, கழுவேற்றப்பட்ட வீரன் அமர்ந்துள்ளார். பெரிய மேல்கொண்டை, காதுகளில் நீண்ட குண்டலங்கள், கழுத்தில் ஆபரணங்கள், வலது கையை துாக்கி அபய முத்திரை, இடது கையில் கத்தி உள்ளது. கால்களில் வீரக்கழல்கள், கைகளில் கடங்கள் அணிந்துள்ளார். வீரனின் அருகில் உடன் கட்டை ஏறிய, அவரின் மனைவி உருவம் உள்ளது. காதுகளில் நீண்ட காதணிகள் அணிந்துள்ளார். கழுவேற்ற தண்டனைக்கு உரியவர் அப்பகுதி போர்ப்படை தளபதி. ஊருக்காக போராடி பகைவர்களால் கொல்லப்பட்டதால், அவரது வீரத்தை போற்றம் வகையில் நடுகல் வைத்துள்ளார். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !