கோயில் கடைகளில் பஞ்சாமிர்தம் விற்க நடவடிக்கை தேவை
பழநி: பழநியின் பிரசித்தி பெற்ற பிரசாதமான பஞ்சாமிர்தத்தை தேவஸ்தானம் நிர்வாகம் மட்டுமின்றி, தனியாரும் தயாரித்து விற்கின்றனர். இதன் மூலமும் கோயிலுக்கு வருமானம் கிடைத்தது. ஊரடங்கு அமலான கடந்த மார்ச் 24 முதல் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
எனவே பஞ்சாமிர்தம், பிரசாத பொருட்களை மார்ச் இறுதியில் பக்தர்களுக்கு இலவசமாக வழங்கினர்.பின்னர் பக்தர்கள் வருகையில்லாததால், பஞ்சாமிர்தம் தயாரிப்பு நிறுத்தப்பட்டது. ஐந்து மாதங்களுக்குப்பின், தற்போது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அரசு அனுமதி அளித்துள்ளது.பழநி கோவிலுக்கு பக்தர்கள் ஆன்லைனில் புக் செய்து வருகின்றனர். ஆனால் பஞ்சாமிர்தம் தயாரிப்பு இன்னும் துவங்கவில்லை.எனவே, அந்த பிரசாதம் கிடைக்காமல் பக்தர்கள் ஏமாற்றமடைகின்றனர். கோயில் சார்பில் பஞ்சாமிர்தம் தயாரிக்க, அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.