உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :1881 days ago
கீழக்கரை: உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலில் ஆவணி மாத பூஜை நடைபெற்றது. மூலவர் வராகி அம்மனுக்கு 11 வகையான அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு, வெள்ளிக்கவச அலங்காரத்தில் அருள்பாலித்தார். தற்போது, ஊரடங்கில் தளர்வு ஏற்படுத்தியுள்ளதால், பக்தர்கள் சமூக இடைவெளி பின்பற்றி, பவுர்ணமி பூஜையில் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.