உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலையநல்லூர் மாரியம்மன் கோவிலில் 7 ம் தேதி கும்பாபிஷேகம்

கலையநல்லூர் மாரியம்மன் கோவிலில் 7 ம் தேதி கும்பாபிஷேகம்

தியாகதுருகம்: கலையநல்லூரில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம் 7 ம் தேதி நடக்கிறது. தியாகதுருகம் அடுத்த கலையநல்லூர் கிராமத்தில் 100 ஆண்டுகள் பழமையான முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் திருப்பணி வேலைகள் தர்மகர்த்தா அய்யப்பா தலைமையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் துவங்கியது. மூலவர் விமானம், அர்த்தமண்டபம், விநாயகர், நவக்கிரக சந்நிதி ஆகியவை புதுப்பிக்கப்பட்டது. திருப்பணி வேலைகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று யாகசாலை பூஜையுடன் துவங்குகிறது. இதைத்தொடர்ந்து 7 ம் தேதி காலை 6:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. பக்தர்கள் பாதுகாப்பாக கலந்து கொள்ளும் வகையில் விரிவான ஏற்பாடுகளை திருப்பணி குழுவினர் செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !