உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உத்திரகோசமங்கை சிவன் கோயிலில் செடிகள் வளர்ந்து பாழாகும் கோபுரம்

உத்திரகோசமங்கை சிவன் கோயிலில் செடிகள் வளர்ந்து பாழாகும் கோபுரம்

ராமநாதபுரம்:  ராமநாதபுரம் அருகே  உத்திரகோசமங்கை மங்கள நாதர் சிவன் கோயில் போதிய பராமரிப்பு  இல்லாமல் கோபுரத்தில் செடிகள் வளர்ந்து காணப்படுகிறது. உத்திரகோசமங்கை மங்களநாதர் சிவன் கோயில் பலநுாறு ஆண்டு பழமை வாய்ந்தது. பாண்டிய மன்னர்கள், சேதுபதி ராஜாக்கள் திருப்பணி செய்துள்ளனர். இங்கு   ஆண்டுதோறும் டிசம்பர், ஜனவரியில்  மரகத நடராஜர் ஆருத்ரா தரிசனம் விழாவின்போது கோயிலில் உழவாரப்பணிகள் நடக்கிறது. அதன்பின் கண்டுகொள்ளாத காரணத்தினால்  ராஜகோபுரத்தில் செடிகள் பெரிதாக வளர்ந்து அழகிய சுதைகள் பாழாகின்றன. கோபுர தரிசனம் செய்யும் பக்தர்கள் வேதனை அடைகின்றனர். ஆகையால் உடனடியாக கோபுரத்தில் வளர்ந்துஉள்ள செடிகளை அகற்ற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !