உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றக்குடியில் குருபூஜை விழா

குன்றக்குடியில் குருபூஜை விழா

காரைக்குடி : குன்றக்குடி திருவண்ணாமலை ஆதினத்தை நிறுவியஆதின குரு முதல்வர் தெய்வசிகாமணி பரமாச்சாரிய சுவாமி 695வது மகா குருபூஜை விழா குன்றக்குடி ஆதினத்தில் நடந்தது. குன்றக்குடி அடிகள் வாழ்க்கை வரலாறு ஆங்கில மொழி பெயர்ப்பு நுாலை சாகித்ய அகாடமி வெளியிட்டது. நுாலை பொன்னம்பல அடிகள் வெளியிட பொறியாளர் சுப்பிரமணியன் பெற்றுக்கொண்டார். விழாவில், பொறியாளர் சுப்பிரமணியன், குன்றக்குடி கூட்டுறவு பால்பண்ணை முன்னாள் செயலாளர் தியாகராஜன் ஆகியோருக்கு திருப்பணித் தொண்டர் மணி எனும் பட்டம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !