உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பெரியாண்டவர் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா விமரிசை

பெரியாண்டவர் கோவிலில் 5ம் ஆண்டு திருவிழா விமரிசை

உத்திரமேரூர் : காக்கநல்லுார் பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோவில், ஐந்தாம் ஆண்டு திருவிழா, நேற்று, விமரிசையாக நடந்தது.

உத்திரமேரூர் அடுத்த, காக்கநல்லுார் கிராமத்தில், பெரியநாயகி அம்பாள் சமேத பெரியாண்டவர் கோவிலில், ஐந்தாம் ஆண்டு திருவிழாவை ஒட்டி, நேற்று காலை, 8:00 மணிக்கு பெரியநாயகி அம்பாளுக்குக்கும், பெரியாண்டவருக்கும், சிறப்பு அபிஷேகம் மற்றும் மஹா தீப ஆராதனை நடந்தது.தொடர்ந்து, விநாயகர் பூஜை, மஹா கணபதி ஹோமம் நடந்தது. பக்தர்கள், நேர்த்திக்கடனாக மொட்டை அடித்தும், குழந்தைகளுக்கு காது குத்தியும், பொங்கல் வைத்தும் சுவாமிக்கு படையலிட்டனர். பகல், 12:00 மணிக்கு, அன்னதானம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !