உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஆவணித்திருவிழா துவக்கம்

திருச்செந்தூர் : திருச்செந்தூர்  சுப்பிரமணியசுவாமி கோவில் ஆவணித்திருவிழா  முதல் முறையாக பக்தர்களின்றி  கொடியேற்றத்துடன் துவங்கியது.  தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் கோவில் உள்பிரகாரத்தில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவில் கொரொனா ஊரடங்கால் 165 நாட்களுக்கு பிறகு செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினமும் காலை 5.30 மணி முதல் இரவு 7.30 மணிவரை 2000 பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களின் ஒன்றான ஆவணித்திருவிழா  இன்று அதிகாலை 5-10 மணிக்கு  கொடியேற்றத்துடன் துவங்கியது.

கொடியேற்றத்தை முன்னிட்டு  1 மணிக்கு கோவில்  நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதணையும் 2-00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவின் நிகழ்ச்சிகளான சுவாமி, அம்மன் வீதி உலா மற்றும் தேரோட்டம் கொரோனா நடவடிக்கையால்  ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் சுவாமி, அம்மன்   அபிஷேகம் அலங்காரம் மற்றும் எழுந்தருதல் அனைத்தும் கோவில் உள் பிரகாரத்தில் நடைபெறுகிறது. இந்த நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதில்லை. மேலும் விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 7 ஆம் திருவிழா சிகப்புசாத்தியும்,  8 ஆம் திருவிழா நடைபெறும் பச்சைசாத்தியும் நடைபெறும் நாட்களான 12, 13 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி இல்லை என கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !