தொன்மை மாறாமல் புராதன கோயில்கள் புதுப்பிக்க திட்டம்
ADDED :1892 days ago
சென்னை : ஹிந்து அறநிலையத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள புராதனக் கோயில்களை தொன்மை மாறாமல் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் குறிப்பிட்ட கோயில்களைத் தேர்வு செய்து அவற்றில் திருப்பணிகள் மேற்கொள்வது நடைமுறையில் உள்ளது. அறநிலையத் துறை அதிகாரிகள் கூறுகையில் கொரோனா பரவலால் இந்தாண்டு கோயில்கள் தேர்வு மற்றும் திருப்பணியில் தாமதம் ஏற்பட்டது. தேர்வு செய்யப்பட்ட கோயில்களில் திருப்பணிக்கான மதிப்பீட்டை விரைந்து மேற்கொள்ளவும் இவற்றின் தொன்மை மாறாமல் புதுப்பிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாநில மற்றும் மண்டல அளவிலான பாரம்பரிய மதிப்பீட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. மண்டல அளவிலான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன என்றனர்.