விநாயகர் கோயில்களில் சங்கடஹர சதுர்த்தி பூஜை
ADDED :1943 days ago
தேவகோட்டை: ஊரடங்கு, 144 தடை உத்தரவு காரணமாக 6 மாதங்களாக கோயில்களில் எந்தவொரு சிறப்பு பூஜைகளும் நடக்கவில்லை. தற்போது கோயிலுக்குள் சமூக இடைவெளியுடன் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.நேற்று முன்தினம் சங்கடஹரசதுர்த்தி வந்ததால் இரவு பால விநாயகர், ஜெயங்கொண்ட விநாயகர் கோயில்களில் சிறப்பு யாகம், அலங்கார பூஜைகள் நடந்தன. பிற விநாயகர் கோயில்களில் ேஹாமம், யாகம் இல்லாமல் சிறப்பு பூஜை மட்டும் நடந்தன. பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.