குல தெய்வத்தை மதிக்க குடும்பத்திற்கொரு முனியசாமி
கமுதி: கமுதி அருகே பாப்பணத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும்தங்களது வீடுகளில் ஒருவருக்கு முனியசாமி என பெயர் வைத்துள்ளனர். இக்கிராம மக்களின் குலதெய்வமாக முனியசாமி கோயில் ஊரின் ஒதுக்குபுறத்தில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் மாசிக்களரி திருவிழாக்களை கொண்டாடி வருகின்றனர். குலதெய்வத்தின் பெயரை, கிராமத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் வைத்துள்ளனர். அப்பாக்களுக்கு முனியசாமி என்றால், அம்மாக்களுக்கு முனீஸ்வரி, பெற்றோர்களுக்கு முனியசாமி பெயர் இல்லையென்றால், குழந்தைகளுக்கு குல தெய்வ பெயரான முனியசாமி பெயரை வைத்து குலதெய்வத்தை மதித்து பயபக்தியில் வாழ்ந்து வருகின்றனர். 130 குடும்பங்களில் 74 குழந்தைகளுக்கு முனியசாமி என பெயர் வைத்து, கிராம மக்கள் குலதெய்வத்தை வழிபட்டு வருகின்றனர்.
பாப்பணம் முனியசாமி: குல தெய்வமான முனியசாமியின் பெயர் வைத்தால்நோய் குழந்தைகளைதாக்காது. விவசாயமும் அதிகளவில் பொய்க்காமல், கிராம மக்களை கிராம தெய்வம் காத்து வருகிறது, என்றார்.