உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கனமழை

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் கனமழை

வத்திராயிருப்பு : சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு 6:00 மணிக்கு துவங்கிய சாரல் மழை, படிப்படியாக அதிகரித்து கனமழையாக இரவு 8:00 மணிவரை பெய்தது. தாணிப்பாறையிலிருந்து கோயிலுக்கு செல்லும் வழுக்குபாறை, மாங்கனி ஓடை, சங்கிலிப் பாறை ஓடைகளில் திடீர் வெள்ளபெருக்கு ஏற்பட்டது. இது வத்திராயிருப்பு ரோட்டிலுள்ள பாலத்தை தொட்டு சென்றது. பொதுப்பணி, வருவாய், அறநிலையத்துறை, வனத்துறை அதிகாரிகள், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !