ஆரோக்கியமாதா ஆலயத்தில் திருப்பலி
ADDED :1943 days ago
ஆர்.எஸ்.மங்கலம்:ஆர்.எஸ்.மங்கலம் அருகே கலங்காப்புளியில்ஆரோக்கிய மாதா கெபியை, சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசைமாணிக்கம் திறந்து வைத்து சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். பின்பு நற்கருணை பேழை நிறுவப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவில் வட்டார பங்கு பாதிரியார் கிளமென்ட் ராஜா உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கலங்காப்புளி கிராமத்தினர் செய்திருந்தனர்.