மரகத லிங்கத்திற்கு பூஜை
ADDED :2142 days ago
சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தியில் திருநோக்கிய அழகியநாதர் கோயில் உள்ளது. இத்தலத்தில் மகாலட்சுமி துளசியால் அர்ச்சனை செய்து சிவபெருமானை வழிபட்டாள். இதனடிப்படையில் இங்கு திங்கட்கிழமைகளில் சுவாமிக்கு துளசி அர்ச்சனை செய்கின்றனர். திருமணத்தடை நீங்கவும், பிரிந்த தம்பதி சேர்ந்து வாழவும் பிரதோஷத்தன்று இங்கு மரகத லிங்கங்களுக்கு பூஜை நடத்தப்படுகிறது. பிரதோஷ நாளில் மட்டும் பச்சை நிற சிவலிங்கங்களைத் தரிசிக்க முடியும்.