உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பக்தர்களுக்கு தடை: தனுஷ்கோடி ராமர் கோயில் வெறிச்

பக்தர்களுக்கு தடை: தனுஷ்கோடி ராமர் கோயில் வெறிச்

 ராமேஸ்வரம்: தனுஷ்கோடி செல்ல பக்தர்களுக்கு போலீசார் தடை விதித்ததால், கோதண்டராமர் கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. ஊரடங்கினால் மார்ச் 24 முதல் ராமேஸ்வரம் கோயில் உப கோயிலான தனுஷ்கோடி அருகே அமைந்துள்ள கோதண்டராமர் கோயில், ராமாயண வரலாற்றில் தொடர்புடையது. ராவணன் தம்பி விபீஷணரை இலங்கை மன்னராக ராமர் அறிவித்து, பட்டாபிேஷகம் சூட்டினார். இதன் நினைவாக இக்கோயில் உருவானது.பழமையான இக்கோயிலுக்கு வட, தென் மாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் பலர் தரிசனம் செய்வார்கள். 161 நாள்களுக்கு பின் செப்.,1ல் இக்கோயில் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. ஆனால் தனுஷ்கோடி கடற்கரை பூங்கா எனக் கருதி, அங்கு பக்தர்கள், சுற்றுலா பயணிகள் செல்ல போலீசார் தடை விதித்தனர்.இதனால் கோதண்டராமர் கோயில் தரிசிக்க முடியாமல் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்வதால், கோயிலில் பக்தர்கள் இன்றி வெறிச்சோடி கிடக்கிறது. எனவே ராமர் கோயிலுக்கு செல்ல பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என ஹிந்து அமைப்பினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !