உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை

கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை

மடத்துக்குளம்: மடத்துக்குளம் அருகே, சிதிலம் அடைந்து ள்ள கொங்குனீஸ்வரர் கோவிலை புதுப்பிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மடத்துக்குளம் தாலுகா அமராவதி ஆற் றங்கரை பகுதியில் சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டமிகப் பழமையான கோவில்கள் உள்ளன இதில் சில கோவில்கள் முறையான பராமரிப்பி ன்றி அழிந்து வருகிறது. இதில் குறிப்பிட த்தக்கதாக கொங்குனீஸ்வரர்கோயில் மிகவும் சிதிலமடைந்துகாணப்படுகிறது. கடத்தூர் நுழைவாயிலில் அமைந்துள்ள இந்த கோயில் பல நூற்றாண்டுகளை கடந்து வரலாற்றின் அடையாளமாக உள்ளது. இதை புதுப்பிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது " கொங்கு நாடு வரை சோழர்களின் ஆட்சி எல்லை இருந்தது.அப்போதைய காலகட்டத்தில் ,இந்த கோவில் கட்டப்ப ட்டது. கருங்கற்களை மட்டுமே பயன்படு த்தி கட்டப்பட்டதால் இது "கற்றளி" என அழைக்கப்படுகிறது. சோழ மன்னர்கள் ஆட்சி முறை, கோவிலுக்கு வழங்கப்பட்ட தானங்கள், மற்றும் பல அரிய தகவல்கள் கோவில் சுவர்களில் கல்வெட்டுகளாக உள்ளன. நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவில் சிறப்புடன் இருந்தது அதற்குப் பின்பு முறையான பராமரிப்பி ன்றி, தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது. கோவிலின் வலது பக்க சுவர் பெரும்பகுதி இடிந்து விழுந்து விட்டது. மேற்கூரையும் ஆபத்தான நிலையில் உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க நினை வுச் சின்னமாக உள்ள இந்த கோவிலை பராமரித்து புதுப்பிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !