குறைகளை நிறைகளாக்குவோம்!
ADDED :1913 days ago
பிறர் நம்மை உயர்வாக நினைக்க வேண்டும் என விரும்புகிறோம். முதலில் மற்றவரை உயர்வாக நாம் நினைத்தால் தான் மற்றவர்களும் கவுரவமாக நடத்துவர். ஆனால் நடைமுறை வாழ்வில் இந்த எதிர்பார்ப்பு நடப்பதில்லை. பெரும்பாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் விமர்சனம் செய்து மற்றவரை காயப்படுத்துகின்றனர். காழ்ப்புணர்வுடன் வரும் விமர்சனத்தை பொருட்படுத்த தேவையில்லை. தகுதியானவர்களின் விமர்சனம் ஒருவரின் குறைகளை சீர்படுத்த உதவும். இந்த அணுகுமுறை அமைதிக்கு வழிவகுக்கும். குறைகளை நிறைகளாக மாற்ற என்ன செய்யலாம் என்ற உணர்வுடன் பயணிப்போம். ஆண்டவர் கொடுத்திருக்கும் வாழ்க்கை வாழ்வதற்கே என்பதை மனதில் நிலைநிறுத்துவோம்.