உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மனிதனே...மனம் திருந்து!

மனிதனே...மனம் திருந்து!


 தொழுகை நடந்தது. அந்தக் கூட்டத்தில் முல்லாவும் இருந்தார். அப்போது ஒருவன் தன் அருகில் இருந்தனிடம்,  
‘‘அடடா! மறதியால் வீட்டுக் கதவை மூடாமல் வந்து விட்டேனே’’ என்றான்.
‘‘தொழுகை நேரத்தில் பேசியதால் என் பிரார்த்தனையைக் கலைத்து விட்டாய். அதனால் மறுபடியும் நீ தொழுகையில் ஈடுபட வேண்டும்’’ என கோபித்தான் அவன்..
‘‘நீயுந்தான் என்னுடன் பேசினாய். அதனால் என் பிரார்த்தனையும் கலைந்து விட்டது’’  என்றான் முதலாமவன்.
இந்த உரையாடலைக் கேட்ட முல்லா  சிரித்தார்.
‘‘ஏன் சிரிக்கிறீர்’’ என அந்த இருவரும் கேட்டனர்.
‘‘மனிதனின் இயல்பை நினைத்து சிரித்தேன். தான் முறையாகப் பிரார்த்தனை செய்வதை விட, மற்றவன் என்ன செய்கிறான் என்பதைக் கவனிப்பதில் அக்கறை செலுத்துகிறான். பிறரிடமுள்ள குறைகளை மட்டுமே காண்பவன் தன்னிடம் உள்ள குறைகளை கவனிக்க தவறுகிறான். இதை திருத்திக் கொண்டால் வாழ்வு சிறக்கும்’’ என்றார் முல்லா. இருவரும் வெட்கத்தால் தலைகுனிந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !