உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: குவியும் பக்தர்கள்

சதுரகிரியில் அமாவாசை வழிபாடு: குவியும் பக்தர்கள்

வத்திராயிருப்பு: சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில்  மகாளய அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு செப். 15 முதல் 18 மதியம் 1:00 மணி வரை நான்கு நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது. நாளை (செப்.,17) மகாளய அமாவாசையை முன்னிட்டு, தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காலை 6:45 மணிக்கு வெப்பபரிசோதனைக்கு பின் இன்று மலையேற அனுமதிக்கபட்டனர். முகக்கவசமின்றி வந்தவர்களுக்கு கோயில் அலுவலர்கள் முகக்கவசம் வழங்கினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !