சீரடி சாய்பாபா கோவிலுக்கு தங்கத்தாலான குடம் காணிக்கை!
ADDED :4897 days ago
சீரடி: மராட்டிய மாநிலம் சீரடி சாய்பாபா கோவிலுக்கு, இரண்டு பக்தர்கள், 60 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை காணிக்கையாக வழங்கினர்.டில்லியை சேர்ந்த பக்தர், ஒன்றரை கிலோ எடையுள்ள தங்கத்தினால் வடிவமைக்கப்பட்ட பூஜைக்கான மணியை வழங்கினார். மும்பையை சேர்ந்த மற்றொரு பக்தர், 900 கிராம் எடை கொண்ட தங்க குடத்தை கோவில் அதிகாரிகளிடம் காணிக்கையாக அளித்தார். கடந்த, ஐந்து ஆண்டுகளாக இக்கோவிலுக்கு தங்க ஆபரணங்களை காணிக்கையாக வழங்குவது அதிகரித்து வருவதாக கோவில் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.