அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
ADDED :4984 days ago
ராமேஸ்வரம்: வைகாசி அமாவாசையை முன்னிட்டு, நேற்று முன்தினம் இரவே ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். நேற்று அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு பின், அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடினர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர்.