நன்மை செய்யுங்கள்
ADDED :1945 days ago
ஒருவன் நன்மை செய்ய எண்ணி அதை செய்ய முடியாவிட்டாலும் இறைவனால் அதற்கான நன்மை கிடைக்கவே செய்யும். மனதில் எண்ணிய நன்மையை அப்படியே செய்தவருக்கு பத்து மடங்கு முதல் எழுநுாறு மடங்கு வரை ஒருவருக்கு நன்மை கிடைக்கும். இதே நேரத்தில் மற்றவர் துன்பத்தைக் கண்டு ஒருவன் சிரித்தால் இறைவன் பொறுக்க மாட்டான். மாறாக துன்பப்படுபவரை விடுவிப்பதோடு ஏளனம் செய்தவரை சோதனைகளில் மூழ்கடிப்பான்.